Wednesday, November 10, 2010

Really nice

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."
"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு
கேப்பாங்க.இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு. அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும் ?" –
அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

அப்பா : “சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”


அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
-
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம். -
அப்பா : "CR-னா?"
-
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." -
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?"
-
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."

அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

-
அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.


அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

அப்பா: "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

அப்பா : "எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும்,
அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-
"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய
விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.


அப்பா : "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

Tuesday, December 9, 2008

12 Ways To Know That You Love Someone

TWELVE:
You talk with him/her late at night and when you go to bed, you still think of him/her.

ELEVEN:
You walk slowly when you are with him/her.

TEN:
You do not feel Ok when he/she is far away.

NINE:
You smile when you hear his/her voice.

EIGHT:
When you look at him/her, you do not see other people around you. You see only him/her.

SIX:
He/ She is everything you want to think.

FIVE:
You realize that you smile every time you look at him/her.

FOUR:
You would do anything to see him/her.

THREE:
While you have been reading this, there was a person in your mind all the time.

TWO:
You've been so busy thinking of that person that you did not notice that number 7 is missing.

ONE:
You are going to check above if that is true and now; you are silently laughing to yourself.

NOW MAKE A WISH! YOU KNOW WHAT YOU WANT THE MOST...

Saturday, November 29, 2008

The road is never long between friends

Sometimes in life, you find a special friend;
Someone who changes your life
just by being part of it.
Someone who makes you laugh
until you can't stop;
Someone who makes you believe
that there really is good in the world.
Someone who convinces you
that there really is an unlocked door
just waiting for you to open it.

Always try to help a friend in need
Believe in yourself
Be brave...but it's ok to be afraid sometimes
Study hard
Give lots of kisses
Laugh often
Don't be overly concerned with your weight, it's just a number
Always try to see the glass half full
Meet new people, even if they look different to you
Remain calm, even when it seems hopeless
Take lots of naps...
Be weird whenever you have the chance
Love your friends, no matter who they are
Don't waste food
RELAX
Take an occasional risk
Try to have a little fun each day....it's important
Work together as a team
Share a joke with friends
Fall in love with someone.. ...and say "I love you" often
Express yourself creatively
Be conscious of your appearance
Always be up for surprises
Love someone with all of your heart
Share with friends
Watch your step
It will get better
There is always someone who loves you more than you know
Exercise to keep fit
Live up to your name
Seize the Moment
Hold on to good friends; they are few and far between
Indulge in the things you truly love
Cherish every Sunday
At the end of the day... PRAY ........ and close your eyes
And smile at least once a day!

Life is short
They say it takes a minute
To find a special person,
an hour to appreciate them
a day to love them
but then an entire life
to forget them

Friday, November 28, 2008

தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?

கோமதிக்கு வயது 24. வாட்டசாட்டமானவள். உயரமானவள். எல்லாவற்றையும் விட முக்கியமாக அழகானவள். பார்த்தவர்களைத் திரும்பப் பார்க்க வைக்கும் அழகு. அழகு என்பது எதற்கு இங்கே வலியுறுத்திச் சொல்லப்படுகிறது?

அப்போதுதான் ஒரு சுவாரசியத்தோடு படிப்பீர்கள்.

கோமதி கதை.

காலம் எழுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.அவளுடைய வீடு பொதிகைத் தென்றல் ருடிக்கொடுக்கும் ஒரு பசுமையான கிராமத்தில் இருந்தது.கோமதி நான்கு பசுமாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.

அவளுடைய கணவன் சுகவாசி! இருந்த நான்கு வேலி நிலத்தையும் குத்தகைக்குக் கொடுத்து விட்டு, குத்தகைப் பணத்தில் சுகமாக வாழ்ந்து வந்தான்.

கோமதி சுறுசுறுப்பானவள். சுயமாக எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக மாடுகள், மாட்டுத் தொழுவம், அதைச் சுத்தப் படுத்துதல், மாட்டுத் தீவனம், பால் கரத்தல், இத்யாதி போன்றவற்றில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள்.

அதேபோல காலையில் இருபது லிட்டர் பால் - மாலையில் 20 லிட்டர் பால் எனப் பால்வியாபாரத்தையும் அவள்தான் செய்து வந்தாள். இரண்டு பாத்திரங்களில் பால்.அதை வைத்துத்தூக்க வசதியாக ஒரு கூடை. அந்தக் கூடையைத் தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள நகரத்திற்குக் கொண்டுபோய் வாடிக்கையாளர்கள் வீடுகளில் அவள்தான் விற்றுவிட்டு வரவேண்டும். அதோடு அவள் செல்லும் வழியில் குறுக்கிடும் காட்டாற்றையும் கடந்து சென்று வரவேண்டும்.

காட்டாற்றில் வருடம் முழுவதும் கணுக்கால் அளவு அல்லது முழங்கால் அளவிற்குத் தண்ணீர் ஓடும். மழைக்காலங்களில் மட்டும் வெள்ளப் பெறுக் கெடுக்கும். அப்போது ஆற்றைக கடக்க நினைப்பது முடியாத காரியம். கோமதியும் அந்தக் காட்டாற்றில் தனது சிவந்த பாதங்களை முழுமையாக
நனைத்து விளையாடிக்கொண்டே போய்வருவதில் ஒரு அலாதியான மகிழ்வு கொள்வாள்.

ஆரம்ப காலங்களில் அந்த வியாபரத்தை மிகவும் நாணயமாக செய்துவந்த கோமதி, பின்னாட்களில் காசின் மேல் கொண்ட காதலால், சம அளவு தண்ணீர் கலந்து விற்க ஆரம்பித்தாள்.

அவள் புறப்படும் முன்பு, தங்கள் கிணற்று நீரைத் துணியால் வடிகட்டி, பாலில் சேர்ப்பதைப் பார்த்த, பக்கத்து வீட்டு ஆவுடையா பிள்ளை, அவளைக் கடிந்து கொண்டார்.

"தாயீ, பாலில் எதையும் கலக்காதே! அது பாவச் செயல். எத்தனை பேர் உன்னை நம்பி தங்கள் குழ்ந்தை குட்டிகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கி றார்கள். எதாவது நீர்த் தொற்று நோய் ஏற்பட்டால் அந்தப்பாவம் உன்னைத்தான் வந்து சேரும்"

கோமதி அதைக் கண்டு கொள்ளவில்லை!

எப்போது முன்னேறுவதாம்?

தண்ணீர் ஊற்றி விற்க ஆரம்பித்தவுடன் அவள் கையில் அபரிதமாகப் பணம் சேர ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் ஏது வங்கிச் சேமிப்புக் கணக்கு?

கோமதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நெல்லைக்குச் சென்று, அந்தப் பணத்தை நகையாக மாற்றிக் கொண்டு வந்து விடுவாள். வாங்கிய நகைகளை வீட்டில் வைக்க யோசனை செய்து தானே அணிந்து கொண்டு திரிவாள். ஒற்றை வடம், இரட்டை வடம் என்று சங்கிலிகள். கையைக் கலகலக்கச்
செய்யும் வலையல்கள் என்று ஒரு நகைக் கடைப் பொம்மை போல் ஆகி விட்டாள். தாய் வீட்டுச் சீதனம், தான் வாங்கியது என அவள் மேனியில் ஐம்பது பவுன்களுக்கு மேல் தங்கம் நகை வடிவில் குடி கொண்டது.

ஒரு நாள், நகருக்குச் சென்று பாலை விற்றுவிட்டு வந்தவள், ஆற்றின் அருகே வந்த பின்தான் கவனித்தாள். ஆற்றில் அரை முழங்கால் அளவு நீர், சுர்'ரென்று சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அவள் உணர்ந்து விட்டாள், இன்னும் சில மணித்துளிகளில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கான
முன்னோட்டம் அது!.

வெள்ளம் வருவதற்குள் ஆற்றைக் கடந்து விடலாம் என்று பரபரப்பாக ஆற்றைக் கடக்க முனைந்தவளை, அவள் பாதி ஆற்றை கடக்கும் முன்பே, இடுப்பளவு உயர்ந்த ஆற்று நீர் புரட்டிப் போட்டு விட்டது. அவள் சுதாகரிக்கும் முன்பே, அடுத்தடுத்தடுத்த நொடிகளில் வந்த பெரு வெள்ளம் அவளோடு
முழுமையாக விளையாட ஆரம்பித்தது.

ஈடு கொடுத்து அவளால் விளையாட முடியவில்லை. அதோடு பயத்தில் மயங்கி விட்டாள்

இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். ஆற்றின் ஒரு பக்கக் கரையில் மயங்கிக் கிடந்த கோமதி நினைவு திரும்பிவர கண் விழித்துப் பார்த்தாள். ஆற்றில் வெள்ளம் வடிந்திருந்தது.

தான் எங்கே கிடக்கிறோம் என்று பார்த்தாள். தான் செல்ல வேண்டிய பாதையில் இருந்து ஒரு மைல் தூரம் தள்ளி செட்டியார் தோப்பு அருகே இருப்பதை உணர்ந்தாள்.

ஆற்று நீர் தன்னை உருட்டி கொண்டு வந்து அங்கே தள்ளிவிட்டுப் போயிருக்கிறது என்று எண்ணினாள். அதோடு தன்னை உயிரோடு விட்டு விட்டுப் போன ஆற்றை நோக்கிக் கை எடுத்துக் கும்பிட்டாள்.

அதற்குப் பிறகுதான் அவள் கவனித்தாள். அடுத்த நொடி தீயை மிதித்தவள் போலாகிவிட்டாள்.

என்ன ஆகிவிட்டிருந்தது?

அவள் உடலை அலங்கரித்துக் கொண்டிருந்த நகைகளில் ஒன்று கூட இல்லை. எல்லாம் எங்கே போயிருக்கும்? அவள் மயங்கிக் கிடந்தபோது அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் எவனோ ஒருவன் அத்தனை நகைகளையும் அடித்துக் கொண்டு போயிருந்தான்.

ஈரத்தில் உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டிருந்த தன்னுடைய ஆடைகளைக்கூடச் சரி செய்யும் சிந்தை இன்றி அவள் 'ஓ' வென்று குரல் கொடுத்துத் துக்கத்தோடு கதறி அழுக ஆரம்பித்தாள்.

பின்னே அழுகை வராதா என்ன?

இழந்தது, ஒரு பவுனா அல்லது இரண்டு பவுனா? மொத்தமாக ஐம்பது பவுன்களாயிற்றே!

அப்படியே உட்கார்ந்து ஒரு பத்து நிமிடமாவது அழுதிருப்பாள். அப்போதுதான் அது நடந்தது. யாரோ தன்னை நோக்கி நடந்துவரும் ஓசை கேட்டு. அழுகையுடனேயே திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய பக்கத்துவீட்டு மனிதர் ஆவுடையாபிள்ளை அவர்கள்தான் வந்து கொண்டிருந்தார். கையில் காலிக்கூடை. தன்னுடைய தோட்டத்துக் காய்கறிகளை விற்றுவிட்டுத் திரும்புகிறார் போலும்.

வந்தவர் கோமதியைப் பார்த்துக் கேட்டார்," என்ன தாயி, இங்கின உக்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கே?"

கோமதி நடந்ததைச் சொன்னாள்.

ஒரு குறுகுறுப்புடன், அவள் தன்னுடைய பெரிய விழிகளை ஏற்றி இறக்கி விவரித்ததைக் கேட்ட பிள்ளை சொன்னார்.

சரி, விடுதாயி! போன நகைகள் திரும்ப வரவா போகுது? வா, வீட்டுக்குப் போகலாம்"

"எப்படியண்ணே, உங்களால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது? என் துக்கம் தெரியவில்லையா?"

"நீ விசனப்பட்டு என்ன பயன். எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. நீ பாலில் தண்ணீர் கலந்து விற்றபோது, அப்படி விற்காதே - அது பாவச் செயல் என்று சொன்னேன். கேட்கவில்லை. பாவச் செயல் எல்லாமே தர்மத்திற்கு எதிரானது. தர்மதேவன் கண்டிப்பாகக் கணக்கைத் தீர்க்காமல்
விடமாட்டான். உன் கணக்கை இப்போது அவன் தீர்த்திருக்கிறான்.

தண்ணீரில் வந்த காசு தண்ணீரிலேயே போய்விட்டது. நீ உழைத்த உழைப்பிற்கு உன் உயிர் மிஞ்சியிருக்கிறது. வா போகலாம்!"

When...........

When
The school reopened in June,
And we settled in our new desks and
benches!
When we queued up in book depot,
And got our new books
and notes!
When we wanted two Sundays and no Mondays, yet
managed to line up daily for the morning prayers.
We learnt writing with
slates and pencils, and
Progressed To fountain pens and ball pens and then Micro tips!
Whenwe began drawing with crayons and evolved to
Color pencils and finally sketch pens!
When we started calculating
first with tables and then with
Clarke's tables and advanced to
Calculators and computers!
When we chased one another in the
corridors in Intervals, and returned to the classrooms
Drenched in sweat!
When we had lunch in classrooms, corridors,
Playgrounds,
under the trees and even in cycle sheds!
When all the colors in the world,
Decorated the campus on the Second Saturdays!
When a single P.T. period in the week's Time Table,
Was awaited more eagerly than the monsoons!
When cricket was played with writing pads as bats,
And Neckties and socks rolled into balls!
When few played
"kabadi" and "Kho-Kho" in scorching sun,
While others simply played
"book cricket" in the
Confines of classroom!
Of fights but no conspiracies,
Of Competitions but seldom jealousy!
Whenwe used to
watch Live Cricket telecast,
In the opposite house in Intervals and Lunch breaks!
When few rushed at 3:45 to
"Conquer" window seats in our School bus!
While few others had "Big Fun", "peppermint",
"Kulfi", "milk ice!" and "sharbat!" at 4o Clock!
Gone are the days
Of Sports Day,
and the annual School Day,
And the one-month long
preparations for them.
Gone are the days
Of the stressful Quarterly,
Half Yearly and Annual Exams, and the most
enjoyed holidays after them!
Gone are the days
Of tenth and twelfth standards, when
we spent almost the whole year writing revision tests!
We learnt,
We enjoyed,
We played,
We won,
We lost,
We laughed,
We cried,
We fought,
We thought.
With so much fun in them, so many friends,
So much experience, all this and more!
Gone are the days
When we used
to talk for hours with our friends!
Now we don't have time to say a `Hi'!
Gone are the days
When we played games on the road!
Now we
Code on the road with laptop!

Gone are the days
When we saw stars
shining at Night!
Now we see stars when our code doesn't
Work!
Gone are the days
When we sat to chat with Friends on grounds!
Now we chat in chat rooms.....!
Gone are the days
Where we
studied just to pass!
Now we study to save our job!
Gone are the days
Where we had no money in our pockets and still fun filled on our hearts!!
Now we have the atm as well as credit card but with an empty heart!!
Gone are the days
Where we shouted on the road!
Now we don't shout even at home
Gone are the days
Where we got lectures from all!
Now we give lectures to all... like the one I'm doing now....!!
Gone are the days
But not the memories, which will be
Lingering in our hearts for ever and ever and
Ever and ever and ever.....
Gone are the Days.... But still there are lot more Days to come in our Life!!
NO MATTER HOW BUSY YOU ARE,
DONT FORGET TO
LIVE THE LIFE THAT STILL
EXISTS......